சதொச ஊடாக இனி 5 கிலோ சீனியை கொள்வனவு செய்யலாம் என சதொசவின் தலைவர் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை சதொசவில் 3 கிலோ சீனி மாத்திரமே மக்கள் கொள்வனவுக்கு அனுமதிக்கப்டபட்ட போதிலும் தற்போது 5 கிலோ சீனியை பெற்றுக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் 5 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவதால் கொள்வனவு செய்ய வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் போதுமான அளவு சீனி இருப்பில் உள்ளது. தனிமைப்படுத்தல் ஊரங்கு காரணமாக தொலைதூர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சீனியை விநியோகிக்க சிறிது தாமதம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment