நாட்டில் புத்தாண்டை முன்னிட்டு மின்வெட்டு இன்றையதினமும் அமுலாக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக மின்வெட்டு அமுலாக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்றும் முன்வெட்டு அமுலாக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளையதினம் மின்வெட்டு தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment