இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஆயுர்வேத சிகிச்சை மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11 ஆவது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சியாகவே சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஆயுர்வேதம், யோகா, மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தியா சென்று மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் ஆயுஷ் விசா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு, ஐரோப்பிய, ரஷ்ய, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்று வரும் நிலையில் புதிய ஆயுஷ் விசா நடைமுறைக்கு வருவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...