puthiyathalaimurai 2023 09 87ead526 6524 44b1 9018 731bccf16f7f actq
உலகம்செய்திகள்

அர்ஜெண்டினாவின் பிரபல நடிகை சில்வினா லூனா மரணம்

Share

அர்ஜெண்டினாவின் பிரபல நடிகை சில்வினா லூனா மரணம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அர்ஜெண்டினாவின் பிரபல நடிகை சில்வினா லூனா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அர்ஜென்டினாவின் மாடல் அழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான நடிகை சில்வினா லூனா கடந்த 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

இதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி என்பவரை நடிகை சில்வினா லூனா அணுகியுள்ளார்.

ஆனால் இந்த ஒப்பனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு நடிகை சில்வினா லூனா-க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக வாரத்தில் மூன்று முறை மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல நடிகை சில்வினா லூனா-வின் உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், உயிர்காக்கும் கருவிகள் மூலம் நடிகை சில்வினா லூனா சிகிச்சை பெற்றார்.

உயிரிழந்த நடிகை சில்வினா லூனா
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகை சில்வினா லூனா உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஒப்பனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...