8 14 scaled
உலகம்செய்திகள்

நடக்கவே தடுமாறும் முதியவர் செய்த செயல்

Share

நடக்கவே தடுமாறும் முதியவர் செய்த செயல்

இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை, இரண்டு முறை இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், மாரடைப்பு என அவருக்கு உள்ள பிரச்சினைகளைப் பார்த்தால், அவர் 24 மணி நேரமும் படுக்கையில் படுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

ஆனால், அந்த 86 வயது கனேடியர், நான்கு வயது சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றியதால், இன்று அவரை மக்கள் ஹீரோ என புகழ்கிறார்கள்.

கனடாவின் எட்மண்டனில் வாழ்ந்துவரும் Fred Wasylyshyn (86), தனது mobility scooter உதவியுடன் தனது நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சற்று தொலைவிலிருந்த குளம் ஒன்றை நோக்கி சுமார் 4 வயதுள்ள சிறுமி ஒருத்தி நடந்து செல்வதைக் கவனித்துள்ளார் அவர்.

அந்த குளம் அபாயமானது என்பதை நன்கு அறிந்த Fred எவ்வளவோ சத்தமிட்டும், அந்தச் சிறுமி குளத்தை நோக்கி நடந்துகொண்டே இருக்க, கஷ்டப்பட்டு தனது மொபிலிட்டி ஸ்கூட்டரிலிருந்து எழுந்த Fred, குளத்தை நோக்கி தன்னாலியன்ற வேகத்தில் நடந்துள்ளார்.

அந்த இடம் நடக்க வசதியாக இல்லாததால், கீழே விழுந்து எழுந்த Fred, அந்தச் சிறுமியை நெருங்குவதற்குள் அவள் தண்ணீருக்குள் இறங்கிவிட்டிருக்கிறாள்.

ஆனால், அவளுக்கு அந்த தண்ணீர் ஆழமாக இருக்கவே அவள் தத்தளிக்கத் துவங்க, அதற்குள் தண்ணீருக்குள் இறங்கிய Fred குழந்தையைப் பிடித்து இழுத்து அவளை கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அதற்குள், நாய் குரைக்கும் சத்தத்தையும், அங்கு நடந்த களேபரத்தையும் கவனித்த மக்கள் ஏழு எட்டு பேர் அங்கு விரைந்ததுடன், மருத்துவ உதவிக்குழுவினரையும் அழைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், வங்கிக்குச் சென்றிருந்த Fredஇன் மனைவி Ruth வீட்டுக்குத் திரும்ப, கணவர் உடல் முழுவதும் சேறாக, நடுங்கியபடி அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற எண்ணம்தான் தனக்கு முதலில் வந்தது என்கிறார் Ruth.

பின்னர், தன் கணவர் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பது தெரிந்ததும், தனக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்கிறார் Ruth. காரணம், அவர் மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுபவர் என்றும், யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், உதவுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்கமாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்கிறார் Ruth.

Fredஐப் பொருத்தவரை, தான் சரியான நேரத்தில் அந்த குளத்தின் அருகில் இருந்தது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் அவர். தான் சில நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும், குழந்தை தண்ணீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்கிறார் அவர்.

Fredஆல் காப்பாற்றப்பட்ட அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளை கண்காணித்து வருவதாகவும், அவளது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...