வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியால் புதிய கைத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இந்தப் புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பணம் அனுப்புதலை ஊக்குவிக்க புதிய பணம் அனுப்பு முறைகள் மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பு முறைகள் பற்றி பரிந்துரைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி குழு ஒன்றை நியமித்துள்ளது.
இதில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கார்கில்ஸ் வங்கி , டயலொக், மொபிடெல் மற்றும் இலங்கை மத்திய வங்கியினர் நிபுணர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் இக்குழுவில் அடங்குகின்றனர்.
இந்தச் செயலியில் அந்நியச் செலவாணி விகிதங்கள், குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், பில் கட்டணங்களைச் செலுத்தல் போன்ற பல சேவைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் லங்கா கிளியர் போன்ற பங்குதாரர்களின் உதவியுடன் இந்தச் செயலி செயற்படுத்தப்படுகிறது என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
Leave a comment