download 5
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Share

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் (Full face Hemmet) அணிவது தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறைகளுடன், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பான சட்டத் தளர்வு தொடர்பிலும் வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158வது பிரிவின் கீழ், 2022,ஜூலை 7, அன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரால், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகளுடன் புதிய வர்த்தமானி அறிவிப்பு (2287/28) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த தலைக்கவசங்கள், இலங்கை தரநிலை விவரக்குறிப்பின் வகை B பாதுகாப்பு தலைக்கவசங்கள் அல்லது அவ்வப்போது பாதுகாப்பு தலைக்கவசங்களுக்கு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் தரநிலைகளாக வகைப்படுத்தப்பட வேண்டும்.அத்தகைய பாதுகாப்பு தலைக்கவசம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட SLS தயாரிப்பு சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும்.

அந்த ஹெல்மெட்கள் அவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக்கக் கூடாது.
பாதுகாப்பு தலைக்கவசங்களில் அதிர்ச்சியை உறிஞ்சும் லைனர், சின் ஸ்ட்ரொப், பஃபர் பேடிங் மற்றும் ஹெட் பேண்ட் ஆகியவை இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், குற்றத்தடுப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி அல்லது சிறிலங்கா இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...