பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
15 பேருடன் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.
ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும், சரத் வீரசேகர, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அமைச்சரவை நியமனத்தை சுதந்திரக்கட்சி எதிர்த்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு மலரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
#SriLanka News
Leave a comment