DUS 0794
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா

Share

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா
இன்றைய தினம் இடம்பெற்றது.

நாவலர் மண்டபத்தில் இன்று காலை 9மணியவில் இடம்பெற்ற இவ் நிகழ்வில்
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனால் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிக்கு உதவிய யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ‘யாழ்.விருது’ வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், வீணாகான குருபீடத்தின் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் ச.முகுந்தன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுநிலைப் பீடாதிபதி தி.கமலநாதன், மாநகர சபையின் சைவ சமய விவகார குழு உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

DUS 0784

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...