கடனைக் கேட்ட பெண் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொடுத்த கடனைக் கேட்ட பெண் படுகொலை செய்து புதைப்பு! – யாழில் கொடூரம்

Share

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்., மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்குக் கொடுத்த 3 இலட்சம் ரூபா பணம் வாங்கச் சென்றபோதே காணாமல்போயிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி இருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பணம் வாங்கிய குடும்பத்தினர், அப்பெண்ணைப் படுகொலை செய்து, அவர்களது வீட்டுக்குப் பின்னால் புதைத்துள்ளனர் எனவும், அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனவும் என்ற சந்தேகத்தில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரைக் கைதுசெய்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...