Mandapam camp
இலங்கைஅரசியல்இந்தியாசெய்திகள்

கொலை விவகாரம்: மண்டபம் முகாம் இலங்கை அகதிகள் கைது!

Share

இந்தியா- தமிழகத்தில் ஈழ அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகக் கடமையாற்றிய 58 வயதான பெண், அவரது 34 வயதான மகளின் உடல்கள் கருகிய நிலையில் நேற்று முன்தினம் (09) மண்டபத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கட்டட பணிகளில் ஈடுபட்டு வந்த இலங்கை அகதிகள் மூவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தமிழகப் பொலிசார் இனங்காணப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 6 ஆம் திகதி கூரான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த குழுவினர், தூக்கத்தில் இருந்த தாயையும் மகளையும் தாக்கிக் கொலை செய்து தடயத்தை மறைக்கும் நோக்கில் உடல்களை தீயிட்டு எரித்துள்ளனர்.

அதற்குப் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மண்டபம் பொலிஸார் உயிரிழந்தவர்களின் வீட்டில் ஊழியர்களாகப் பணியாற்றிய மண்டபம் முகாமில் வசித்த 30 மற்றும் 35 வயதான இருவரே கைதாகியுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவருக்கும் பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...