Mother
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காணாமல்போன மகன் குறித்த தகவல் தெரியாமலேயே உயிரிழந்த தாய்!

Share

காணாமல் போன தன் மகனைத் தேடி அலைந்து வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா- பூம்புகார் கல்மடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா ராமாயி (வயது 78) என்ற தாயே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் (வயது 38) கடந்த 2007ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து, வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத் தேடி கடந்த 1799 நாட்களாக வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் பங்கேற்றிருந்தார்.

Mother son

இந்த நிலையில் அவர், தனது மகன் குறித்த எவ்வித தகவலும் தெரிந்துகொள்ளாமல் இன்று (21) உயிரிழந்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...