இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை , இந்திய மீனவர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையிலும், இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்திவரும் பின்புலத்திலுமே மோடி கொழும்பு வரவுள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருவார் எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இது பற்றி தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment