IMG 9545
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடலில் நீராடச் சென்ற 3 சகோதரர்கள் மாயம்! – செம்மலையில் சோகம்

Share

முல்லைத்தீவு, செம்மலைக் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

அளம்பில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலைக் கடலில் இன்று நீராடச் சென்றுள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர், அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் மீட்கும் முயற்சியில் ஏனைய இரு சகோதர்களும் ஈடுபட்டபோது, அவர்களும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பத்மநாதன் விஸ்வநாதன் (வயது 29), பத்மநாதன் விஜித் (வயது 26), பத்மநாதன் விழித்திரன் (வயது 22) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே காணாமல்போயுள்ளனர்.

தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் தாமதமடைந்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...