அமைச்சு பதவி என்பது மிகப் பெரும் பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். எனவே சலுகைகளை எதிர்பார்க்காது நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
– இவ்வாறு இன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பதற்கான தனது பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை.
மக்களின் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக்கி பயன்படுத்தும் வகையில் ஒரு கும்பல் செயற்பட்டு வருகிறது. இந்த நிலைமையை நாம் தலையிட்டு நிச்சயம் கட்டுப்படுத்துவோம். எவ்வளவு கடினமாக இருந்தாலும் சில தீர்மானங்களை எடுத்தேயாக வேண்டும்.
எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பொருளாதாரத்தை சீர் செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. நாட்டின் அரசமைப்புக்கு மதிப்பளித்து, மாற்றங்களைச் செய்வதன் மூலம், நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்படும்.
இதற்கு மக்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment