யாழ்.மாவட்ட மீனவர்களினால் இன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்தக் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தநிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில், போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்தபோது அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.
பொதுப் பிரச்சினைகளில் ஒன்றுபடாத தமிழ் தரப்புக்களை நினைத்து போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கவலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment