இலங்கையில் மே – 09 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்களில் 364 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
412 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கோட்டாகோகம, மைனாகோகம உட்பட மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 805 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
#SriLankaNews
Leave a comment