ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது
கோட்டபாய அரசின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மின்சாரம், பெற்றோல், டீசல் ,மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டினைக் மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தும் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொல்புரம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் முன்னிலையில் இன,மத, கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடுங்கள்.
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அழைப்பு விடுத்துள்ளார் .
#SriLankaNews
Leave a comment