24 66136acc002e8
இலங்கைசெய்திகள்

கோவிலில் அன்னதானம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

Share

கோவிலில் அன்னதானம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா – நல்லதண்ணி பகுதியிலுள்ள லக்கசபான தோட்ட ஆலயமொன்றின் திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை ஏற்படுத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது, நேற்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வைத்தியசாலைக்கு அதிக நோயாளிகள் வருகை தந்ததன் காரணமாக அனைத்துப் பகுதியினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நோயாளிகள் பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் எனவும், 28 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...