Mano
அரசியல்இலங்கைசெய்திகள்

தலைமைப்பதவியில் இருந்து விலகுகிறார் மனோ!

Share

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.

‘சூரியன்’ வானொலியில் ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றோம். அதற்காக மலையக அபிலாசை ஆவணத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவே ,கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகி, அப்பணியை செய்ய எதிர்பார்க்கின்றேன். கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார்.

மலையக அபிலாஷை ஆவணம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் அரசியல் குழு முடிவெடுக்கும் எனவும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...