mahinda 1
இலங்கைசெய்திகள்

மஹிந்த இத்தாலி பயணம் – பாப்பரசரை சந்திக்கமாட்டார்!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்,

இத்தாலியிலுள்ள போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அடுத்த வார இறுதியில் இத்தாலி செல்லவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர், பிரதமர் புனித வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் உட்பட்ட பல விடயங்கள் பற்றிய விசாரணையின் முன்னேற்றம் பற்றி விளக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திக்கவுள்ளார் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...