பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று (23) மதியம் 12 மணியளவில் திருப்பதிக்குச் சென்றுள்ளார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை சித்தூர் ஆட்சியர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.
நாளை வெள்ளிக்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.
பின்னர் மீண்டும் விமானம் மூலம் இலங்கையை வந்தடையவுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் விஜயத்தினை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
#SrilankaNews
Leave a comment