b1874651 9aa92aa5 52913258 ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

எதிராகவே வாக்களிப்போம்! – பெரமுனவினர் தெரிவிப்பு

Share

பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த தான், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 22ஆவது திருத்தம் வேடிக்கையானது என்று தெரிவித்த கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கூறினார்.

குழுவாக சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில், எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...