Ranil
இலங்கைசெய்திகள்

நல்லூர் கந்தனை பிரார்த்திப்போம் – வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

Share

இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகொண்டு, அனைவருக்கும் நலம்நல்க நல்லூர் கந்தனைப் பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல வரலாற்றுச் சிறப்புக்களையும் மகிமைகளையும் கொண்ட கந்தசுவாமி கோயில் திருவிழா தற்போது வெகுவிமர்சையாக நடந்துவருகிறது. இம்முறை 25.08.2022 வியாழக்கிழமை அன்று கந்தப்பெருமான் தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா விசேஷமானது. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் இன, மத பேதங்களைக் கடந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இதன்போது ஒன்றுகூடுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

இந்துக்களோடு சிங்கள பௌத்த மக்களும் ஏனைய சமயத்தவர்களும் தவறாது வழிபட்டு ஆசிபெறும் நல்லூர் கந்தனின் சிறப்பானது, இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான உறவு வலுப்பெற உதவுகிறது.

‘நாட்டின் நெருக்கடிகளை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது. இந்தத் தருணத்தில் இலங்கையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் விலகி, சுபீட்சமான வாழ்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் நலம் நல்க நல்லூர் கந்தனை அனைவருமாக ஒன்றுகூடி பிரார்த்திப்போம்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...