82ec1e6d 00890db2 3b1f8845 sajith
இலங்கைசெய்திகள்

நாட்டை கட்டியெழுப்ப பிரார்த்திப்போம்

Share

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும், அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவன்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...