corona death
இலங்கைசெய்திகள்

வடக்கில் கடந்த வாரம் மட்டும் தொற்று 4,083 – சாவு 106

Share

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 83 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 106 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 45 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சி மாவடடத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாத் தொற்றால்  உயிரிழந்துள்ளனர்.

அதன்படி வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 515 பேராக உயர்வடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதி மாத்திரம் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 246 பேரும் வவுனியாவில் 160 பேரும் கிளிநொச்சியில் 99 பேரும் முல்லைத்தீவில் 39 பேரும் மன்னாரில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடமாகாணத்தில் நேற்று 22 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தனர். அதன்படி வவுனியா மாவட்டத்தில் 16 பேரும் யாழ்ப்பாணத்தில் 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவருமே நேற்று உயிரிழந்தவர்களாவர்.

அந்நிலையில் வடக்கு மாகாணத்தில் நேற்றுவரை 30 ஆயிரத்து 912 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 474 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 635 பேரும் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 788 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  2 ஆயிரத்து 192 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...