EGG 1
இலங்கைசெய்திகள்

முட்டைக்கு தட்டுப்பாடு!

Share

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிவப்பு முட்டை ஒன்று 55 ரூபாக்கும், வெள்ளை முட்டை 54 ஒன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சந்தையில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 660 ரூபாய் தொடக்கம் 680 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மைய நாட்களாக முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்த காரணத்தினால், அதை கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது.

எனினும், விலங்குணவு இறக்குமதி மற்றும் கோழி இறக்குமதி குறைந்துள்ள காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் அடுத்த வருடத்தில் முட்டைத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை உயர்ந்து செல்கின்றமை மற்றும் தட்டுப்பாடு நிலவும் காரணத்தினால் சந்தையில் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...