கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (20.07.2023) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவவினால் புதைகுழி அகழ்வுக்கான செலவு குறித்த உத்தேச பாதீடு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அகழ்வு பணியை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்னத்துடன், ராஜ் சோமுதேவா ஆகியோரை நீதிமன்றம் அழைத்துள்ளது.

இதேவேளை, தொல்பொருள் திணைக்களம் இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...