rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் கருத்து

Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் கருத்து

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த விடயத்தில் அரசு அக்கறையுடன் செயற்படுவதனால் தான் அகழ்வாய்வுக்கென நிதியையும் ஒதுக்கியுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த புதைகுழியிலிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலும், தடயப் பொருட்கள் குறித்தும் தற்போது என்னால் கருத்துரைக்க முடியாது.

அதேவேளை, அகழ்வாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா அல்லது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் அடுத்தகட்ட பகுப்பாய்வு நடவடிக்கைகள் என்னவென்று நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.

எனினும், இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

நாள்தோறும் விடுதலைப்புலி போராளிகளின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படுவதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...