6 16
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய தம்முடன் சிறையில் வைத்திருந்த அங்கீகரிக்கப்படாத பொருட்கள்

Share

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் இருந்து பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், 2025 மே 7 ஆம் திகதியன்று ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, மே 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சிறைச்சாலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களில் யானை முத்து, பல மரப்பட்டை துண்டுகள் மற்றும் ஒரு சிறிய பொறிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவை அடங்கியுள்ளன.

விசாரணையின்போது, இந்த பொருட்கள் தனது தந்தையால் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தனது பாதுகாப்புக்காக அவற்றை சிறைக்கும் எடுத்து வந்ததாக ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...