18 1
இலங்கைசெய்திகள்

கருணா – பிள்ளையானுக்கு அநுர தரப்பு பகிரங்க சவால்!

Share

கருணா – பிள்ளையானுக்கு அநுர தரப்பு பகிரங்க சவால்!

வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், கருணா – பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti ) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மட்டக்களப்பில் பழைய அரசியல்வாதிகள் பழைய கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அநுரகுமாரவை தெரியும் என இங்குள்ள அரசியல் தலைமைகள் கூறினாலும், அரசாங்கத்தில் அவர்களுக்கு இடமில்லை. குறிப்பாக மட்டக்களப்பில் பிள்ளையானின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அரசு சலுகைகளை பாவித்தே ரணில் விக்ரமசிங்க பிரசாரம் செய்து கொண்டார்.

அவ்வாறே சஜித் பிரேமதாசவும், பிரசார செயலை முன்னெடுத்திருந்தார்.

அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால் மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியிருந்தனர்.

ஜோன்சன் பெர்னான்டோ, லொஹான் ரத்வத்த போன்றோருக்கு, அதிகாரத்தின் மூலம் இனிமேல் களவாட முடியாது.

அவர்கள் நீதிக்கு முன்னால் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆரம்பம் மாத்திரம்தான்.

அரச காரியாலயங்களில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறித்த புகைப்படங்கள் அமைந்திருக்கும்.

தற்போது எவருடைய படமும் இல்லை, கிரம உத்தியோகஸ்த்தர் காரியாலயம் தொடக்கம் உயர் நீதிமன்றம் வரை ஜனாதிபதிகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

இப்போது அவ்வாறு படங்கள் இல்லை என்பதற்கான காரணங்கள் என்ன? அரச ஊழியர்களுக்கு அரசாங்க தலையீடு இனி இல்லை என்பதை அறிவிப்பதே.

நீண்ட காலத்துக்கு பின்னர் நிதானமான ஒரு நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கின்றது’’ என்றார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...