6 16
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் வெற்றி உறுதி! திருக்கோவில் பிரசாரத்தில் பிள்ளையான் திட்டவட்டம்

Share

ரணிலின் வெற்றி உறுதி! திருக்கோவில் பிரசாரத்தில் பிள்ளையான் திட்டவட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்போது, கிழக்கு மக்களும் அதில் பங்குதாரர் ஆக வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று(11) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, யாழ்ப்பாணத்திலிருந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு அழிவை நோக்கி நகர்வதா, ஜனாதிபதியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அமைச்சு ஒன்றைப் பெற்றுக்கொள்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...