rtjy 294 scaled
இலங்கைசெய்திகள்

மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

Share

மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

களுத்துறை, மீகதென்ன – வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வலல்லாவிட்ட, போபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய ஐ.ஏ.வீரசிறி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர் வெலிப்பன்ன, ஊராகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்த போதே அவர் காணாமல் போனமை தொடர்பில், நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...