குறுகிய காலத்தில் முழு உலகையும் ‘மெனிகே மகே கிட்டே’ எனும் பாடல் மூலம் கவர்ந்த இலங்கை இளம் பாடகி யொஹானி டி சில்வா இலங்கை – இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை கொழும்பில் உள்ள இலங்கைக்காக இந்திய தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்து.
யூடிப்பில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவின் பல மில்லியன் மக்களை கவர்ந்துள்ளது.
இது இந்திய– இலங்கை உறவின் ஆழத்தை பிரதிபலிக்கின்றது.அதனாலேயே இந்திய தூதரகம் இவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இலங்கை – இந்திய கலாசார பாரம்பரிய உறவுகளுக்கு இவரது பிரவேசம் தூண்டுகோலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment