21 6
இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஜீவன் தொண்டமான்

Share

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஜீவன் தொண்டமான்

நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers Congress) நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது.

இதில் 46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.

முதலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவை குழுவின் தலைவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பின்னர் இந்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் பதிவு செய்யப்பட்டு அரசியலில் களமிறங்கிய முதலாவது கட்சி அத்துடன் முதலாவதாக நாட்டில் ஆட்சி அமைத்த கட்சி

இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...