20220928 180216
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் ஜாஸ் இசை நிகழ்வு

Share

ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு ஒன்று நேற்று (28) மாலை யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதியில் நடைபெற்ற ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம் அலையன்ஸ் ஃபிரான்சைஸ், கோதே-இன்ஸ்டிட்யூட் மற்றும் பிரிடிஸ் கவுன்சில் (British council) ஆகியவை இணைந்து இலங்கையின் மூன்று முக்கிய நகரங்களில் பன்மொழி ஜாஸ் இசை சுற்றுப்பயணத்தை நடத்தியிருந்தன அதன் இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணத்தில் இந்த ஜாஸ் இசை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சமாதானமிக்க ஒருங்கிணைந்த சமூகமொன்றை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்ட இவ் பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு பிரதான, பாப் ராக், ஜாஸ் ஃப்யூஷன், ஜாஸ் பாப் மற்றும் லத்தீன் ஜாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இடம்பெற்றது.

இலங்கை மக்களுடன் மொழியியல் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைப் பகிர்ந்து கொண்டு, கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச் சுற்றுப் பயணம் கொழும்பில் ஆரம்பித்து, கண்டிக்கு பயணித்து பின் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது .

இதன் ஆரம்ப கச்சேரி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது . தொடர்ந்து கண்டியில் செப்டம்பர் 26 ஆம் திகதி இடமேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த இசை நிகழ்வில் பாடகர், கிடார் கலைஞர் மற்றும் பாடலாசிரியர் எலியன் அம்ஹெர்ட் மற்றும் Bass இசைக் கலைஞரும், இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான அமண்டா ருஸ்ஸா ஆகியோரின் நிகழ்ச்சிகள் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன், போர்த்துக்கல் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் , இலங்கைக்காக சுவிற்சலாந்து துணை தூதுவர் மற்றும் சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள் , யாழ் இந்திய துணை தூதுவர் , யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் , இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....