rtjy 149 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Share

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் யாழப்பாணம் – ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் நேற்று (08.10.2023) இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதையுடைய கிட்டுனன் லோகநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தவேளை, இன்னொருவர் அதனை கழுவுவதற்காக நீரை பாய்ச்ச ஆரம்பித்துள்ளார்.

இதன்போது திடீரென நீருடன் மின்சாரமும் இணைந்து பாய்ச்சப்பட்டதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...