1
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ். குருநகர் வாசிகள் தமிழகத்தில் தஞ்சம்!

Share

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் சென்று, இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் கரையிறங்கிய வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாழ்ப்பாணம் , மன்னார் கடற்பரப்புக்கள் ஊடாக தமிழகம் சென்று தஞ்சமடைவோர் எண்னிக்கை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 77 இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...