IMG 4173 1 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலையினுள் சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் திறப்பு

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று காலை இடம்பெற்றது.

ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகம் இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரன் ஆலய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

ஆறுமுக நாவலரின் உருவச் சிலையை சிவஶ்ரீ கெங்காதரக் குருக்கள் திரைநீக்கம் செய்து, தீபாராதனை காட்டித் திறந்து வைக்க யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து வணக்கம் செய்தார்.

கொடை வள்ளலார் சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலையை பரமேஸ்வரன் ஆலயப் பிரதம குருக்கள் திரைநீக்கம் செய்து, தீபாராதனை காட்டித் திறந்து வைக்க சேர். பொன். இராமநாதனின் வழித் தோன்றலான என். தியாகராஜா மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபையின் அனுசரனையுடன் நடாத்தப்படவுள்ள வேதாகமப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

PHOTO 2022 08 23 09 30 01 IMG 4205

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...