20201005 085844 1 720x450 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். போதனாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் நெருக்கடி!!! – மருத்துவர் யமுனாநந்தா தெரிவிப்பு

Share

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது ஓர் மருத்துவப் பேரிடரினைக் கட்டியம் கூறியுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

அவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் பல பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது. இதனால் அவசர சத்திரசிகிச்சை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்திரசிகிச்சை தவிர்ந்த ஏனைய சத்திரசிகிச்சைகள் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மயக்க மருந்துகள், சேலைன், சத்திரசிகிச்சையில் அதிகமாகத் தேவைப்படும் பெட்டடின் உட்பட பல மருந்துகள் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே உபயோகிக்கக்கூடியதாக உள்ளன. புற்றுநோய்களுக்கான சிகிச்சை உட்பட பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இச் சந்தர்ப்பத்தில் பொதுமக்களை விழிப்படைய வைத்தல் அவசியம் தேவை. விபத்துக்கள், குழுமோதல்கள், கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து தற்போதைய சூழலை எதிர்கொள்ள அனைவரும் உதவுதல் வேண்டும்.

மேலும் வைத்தியசாலைச் சமூகம் மருத்துவ சேவையினைத் தொடர மனித நேய மருத்துவ அவசர உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...