university 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருவருக்குப் பேராசிரியர் நியமனம்!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் உளநலப் பேராசியராகவும்,

திறமை அடிப்படையிலான உள்ளகப் பதவியுயர்வுக்காக விண்ணப்பித்திருந்த இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் சசிகேஸ் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி வழங்கப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று 29 ஆம் திகதி புதன்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களுக்கமைவான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்விலும், சித்தியடைந்த கலாநிதி க.சசிகேஸ், உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் ஆகியோரின் பதவி உயர்வுக் குறிப்புகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...