1676171900 death 2
இந்தியாஇலங்கைபிராந்தியம்

யாழ் மாநகர நபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் பலி!

Share

யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெப்ரவரி 8ம் திகதி பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மு.றெமீடியஸ் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளான போது தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மூளையில் ஏற்பட்ட கடுமையான சிதைவு மற்றும் இரத்தக் கசிவுகள் மூளையின் செயற்பாடுகளை கடுமையாக பாதித்ததன் விளைவாக சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

12 14
இலங்கைசெய்திகள்

மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி: சஜித்தின் வேண்டுகோள்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இது...

13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான்

இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம்...

14 13
இலங்கைசெய்திகள்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து – பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என...