election
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு பணம் வழங்குவது கடினம்!!

Share

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அறிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணத்தை ஒதுக்க முடியும் என்ற போதிலும், அந்த சுற்றறிக்கையின் கீழ் தேர்தல் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்படவில்லை என நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்படியிருந்தும், அத்தியாவசிய சேவைகள் வகையைச் சேராத நிறுவனங்களுக்குப் பணத்தை வழங்குவதற்கு, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியைப் பெற வேண்டும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக, அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...