நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும்.
நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும்.
இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுமையாக திறக்கப்படுவதால் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும். நாடு இன்னமும் சிவப்பு எச்சரிக்கையில் இருந்து விடுபடவில்லை.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் மக்கள் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை.
நாட்டில் தற்போது டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை. 75 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை மீளத் திறப்பது அச்சுறுத்தலான விடயமாகும்.
தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் நிறைவடையாது நாட்டை திறப்பது மீண்டும் வைரஸ் பரவலுக்கு இடமளித்து மோசமான தாக்கத்தை உருவாக்கும்.
கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் அச்சுறுத்தல் நிலையை நாம் கடக்கவில்லை. எச்சரிக்கை நிலையில் இருந்து நாம் இன்னமும் விடுபடவுமில்லை இல்லை என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Leave a comment