2022 ஆம் ஆண்டு ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களின் விலைகள் மற்றும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலைமைக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
பால்மா, எரிவாயு மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் எனவும், அவற்றின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதேயாகும் என நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment