24 665a176d8930f
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியவர் கொழும்பில் கைது

Share

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியவர் கொழும்பில் கைது

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒஸ்மான் புஷ்பராஜ் ஜெரார்ட் என்ற குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (31) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

அத்துடன், ஐ எஸ் ஐ எஸ் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்களும் கொழும்பில் இருந்து சென்னை ஊடாக அஹமதாபாத் விமான நிலையத்துக்கு சென்ற போது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த அபு என்பவரின் கட்டளைப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...