1500 ரூபாவிற்கு விற்பனையான உரம் தற்போது நாட்டில் பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்பய்படுகிறது என உரச் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூட்டை உரம் 1500 முதல் 2000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பத்தாயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரத்தை விவசாயிகளினால் கொள்வனவு செய்யக்கூடிய நியாயமான விலைக்கு விற்பனை செய்வது குறித்து இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment