23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

Share

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், இரண்டு வயதுக் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவை – மஹியங்கனை வீதியில், தெஹியத்தகண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, 33 வயதுடைய தாயும், அவரது 2 வயது ஆண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் மாவநாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதியான தந்தை மற்றும் 11 வயதுடைய மகன் ஆகியோர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைத் தெஹியத்தகண்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...