sajith 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

உட்கட்சி மோதல் உக்கிரம்!

Share

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.

பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச ஏற்காததால் அதிருப்தியடைந்த ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார , வடிவேல் சுரேஷ் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி, அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக, எதிர்கால அரசியல் பயணத்தை தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.

கருஜயசூரியவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கலாம் என கபீர் ஹாசீம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். இதற்காக தனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க ,மயந்த திஸாநாயக்க தயாராகவே இருந்துள்ளார். இந்த முயற்சி வெற்றியளிக்காததால் கபீர் ஹாசீம் உள்ளிட்ட தரப்பும் மனமுடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

சரத்பொன்சேகா, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்தை தவறாக வழிநடத்துகின்றனர் என மேலும் சில உறுப்பினர்கள், தமது சகாக்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...