இலங்கைசெய்திகள்

சாறிக்கு பதில் மாற்று ஆடை! – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Share
ezgif 3 7b3475c762
Share

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாறியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாறியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது.

அரச அதிகாரிகள், அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், மாற்று ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் ஆசிரியைகள், சாறி மற்றும் ஒசரி அணிவதிலும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பின்லாந்து உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முன்னுதாரணமாகக் கொள்ளுமாறும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...